
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கல்லடி 231வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் டிலூப பண்டாரவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு.
பாகிஸ்தான் நாட்டிற்கு விஜயம் செய்து உயர் படிப்பை மேற்கொள்வதற்காக கல்லடி 231வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் பதவியில் இருந்து விடைபெற்றுச் செல்லும் விறிக்கேட் கொமாண்டர் டிலூப பண்டாரவுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினரால் அவரின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு காத்தான்குடி சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.எம். றஊப் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் செயற்பாடுகள் பற்றிய அறிமுகத்தை சட்டத்தரணி ஏ. உவைஸ் நிகழ்வின் போது தெளிவுபடுத்தினர்.
இந்நிகழ்வில் கல்லடி 231வது இராணுவ படைப்பிரிவின் உயர் அதிகாரிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.



