மசகு எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று சனிக்கிழமை மீண்டும் 86 அமெரிக்க டொலர்களை தாண்டியது.

ஜூலை 17ஆம் திகதி முதல் தொடர்ந்தும் அதிகரித்துவந்த மசகு எண்ணணெய் விலை  கடந்த 2ஆம் திகதி 82 அமெரிக்க டொலராக குறைந்தது.

இந்த நிலையில், நேற்று பிரண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86 அமெரிக்க டொலராக இருந்தது.

அத்துடன் டபிள்யூ ரி ஐ மசகு எண்ணெய் விலையும் 83 டொலர்களை நெருங்கியதாக உலக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.