மட்டு.நாவலடியில் காடுகளை கையகப்படுத்தும் நடவடிக்கையை தடுத்தார் ஜனா !

மட்டக்களப்பு – பொலனறுவை பிரதான வீதியை அண்டிய நாவலடி காடுகளை தீயூட்டி காணிகளை கையாளும் நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா கருணாகரம் தடுத்துள்ளார்.

காடுகளை நெருப்பூட்டி கையகப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஜனா கருணாகரம் உடனடியாக கிழக்கு மாகண ஆளுனர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு நேற்றிரவு கொண்டு வந்ததையடுத்து, இந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து ஆளுனர் உடனடியாக பாதுகாப்பு மற்றும் வனவளத்துறையுடன் கலந்துரையாடி அத்துமீறலை தடுத்து இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு,பொலன்நறுவை பிரதான வீதியை அண்டி நவலடிப்பகுதியில் காடுகள் நெருப்பூட்டி அத்துமீறி கையகப்படுத்துவதை அறிந்து நேற்று சனிக்கிழமை இரவு9.30 மணிக்கு கிழக்கு ஆளுநரை நேரடியாக சந்தித்து பேசியதை தொடந்து ஆளுநர், பொலிசார் மற்றும் வனவளத்துறையினரை தொடர்பு கொண்டு உடனடியாக அத்துமீறுபவர்களை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளடலங்கலான குழுவினர் களவிஜயம் மேற்கொள்ள உள்ளதாக, தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.