மட்டு.வாகரையில் விபத்து : ஒருவர் பலி

-கோ.த.டிலூக்சன்-

மட்டு.வாகரையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

வாகரை கமநல கேந்திர நிலையத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகரை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பால்சேனை நாகபுரத்தை சேர்ந்த மகாலிங்கம் டயரூபன் (20 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதே ஊரை சேர்ந்த ஞானப்பிரகாசம் மிதுர்சன் (20 வயது) விபத்தில் காயமடைந்த நிலையில் வாகரை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இருவரும் மோட்டார் சைக்கிளில், வாகரை நோக்கி சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.