
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு
-கிண்ணியா நிருபர்-
வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விதவைகள், குறைந்த வருமானம் பெறுவோர் முதலானோர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தினால் 3500 ரூபா பெருமதியான வவுச்சர் வழங்கும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி தலைமையின் கீழ் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிண்ணியா, தம்பலகாமம், கந்தளாய் போன்ற பிரதேச செயலகப் பிரிவை உள்ளடக்கிய சுமார் 1834 குடும்பங்களுக்கு இவ் வவுச்சர் வழங்கி வைக்கப்பட்டன.
பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட விழிம்பு நிலை வாழ் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் பெரண்டினா நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் பி.எம்றகீம், பிராந்திய முகாமையாளர் திருச் செல்வம், கிளை முகாமையாளர், பொலிஸ் அதிகாரி, விவசாய போதனாசிரியர், இலங்கை வங்கி ஊழியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்





