
கந்தளாயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை -கந்தளாய் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வனர்த்தம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது.
யானையின் தாக்குதலினால் உயிரிழந்தவர், கந்தளாய் -பேரமடுவ இதில் வசித்து வரும் ஆர். எம். குணவர்தன (64 வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டு முற்றத்திற்கு வருகை தந்த காட்டு யானையை விரட்டுவதற்காக முற்பட்டபோது யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும் உடல் கூற்று பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
