கைபேசிகளை திருடிய மூவர் கைது

-யாழ் நிருபர்-

 

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல கைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் பல்லசுட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என அறியமுடிகிறது.

இந்நிலையில் விசாரணையின்போது அவர்கள் கைப்பேசிகளை திருடியதை ஒத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டவேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.