
இளைஞர்களுக்கான போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிராஜ்நகர் கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இளைஞர்களுக்கான போதைப்பொருள் பாவனைத் தடுப்பு தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த விழிப்புணர்வானது இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர் ஏற்பாட்டில் இடம் பெற்றதுடன், சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் பா.ஹம்சபாலன் வளவாளராக கலந்து கொண்டார்.
இதன் போது போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக நாடக செயற்பாடும், ஆலோசனை வழிகாட்டலும் இடம் பெற்றது.


