
யாழ். அம்பலவாணர் முருகன் ஆலய திருமஞ்ச திருவிழாவில் கலந்துகொண்ட தென் இந்திய நடிகர்கள்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – தாவடி அம்பலவாணர் முருகன் கோவிலின் திருமஞ்ச திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, விநாயகப் பெருமான் மற்றும் முருகப் பெருமான், வள்ளி தெய்வயானை சமேதரராக உள்வீதி வலம் வந்து யாகசாலை பூஜை இடம்பெற்றது.
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அழகிய திருமஞ்சத்தில் முருகப் பெருமான் – வள்ளி தெய்வயானை சமேதரராக, விநாயகப் பெருமானுடன் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்த திருமஞ்ச திருவிழாவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டிருந்தனர்.



