
காதலியை பார்க்க வந்த இளைஞன் சடலமாக மீட்பு
-பதுளை நிருபர்-
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை மஹிங்கனை வீதி 7 கட்டை தல்தென பகுதியில் கால்வாயில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
மஹியங்கனை பதியத்தலாவை வீதியில் 5 ஆம் கட்டை பகுதியில் வசித்து வரும் 27 வயதுடைய இளைஞனே காதலியை பார்க்க பதுளை தல்தென பகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த நிலையில் கால்வாய் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த இளைஞன் தனது காதலியின் வீட்டில் தங்கி இருந்த நிலையில், காதலியின் வீட்டில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள கால்வாய் ஒன்றின் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
