வாகன விபத்து: தந்தையும் மகளும் உயிரிழப்பு

கொழும்பு கடுவெல பிரதேசத்தில் நேற்று வெள்ளிகிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது 48 வயதுடைய தந்தையும் 22 வயதுடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் தனது மகளை வேலை முடிந்த பின்னர் வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் தந்தை அழைத்துச் சென்றபோது லொறியுடன் நேருக்கு நேர் மோதியதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறியின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்