துருப்பிடித்த நிலையில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு

-பதுளை நிருபர்-

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  க்ளெனல்பின் தோட்டத்தின் பலகல பகுதியில் முறிந்து விழுந்த மரமொன்றின் முன்பகுதியில் மெழுகு உறைக்குள் மறைத்து வைக்கப்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வரை பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும்,  குறித்த  பையில் 50 கிராம் துப்பாக்கி பவுடர் (பொட்டாசியம் நைட்ரேட்) இருப்பதுடன் துப்பாக்கி துருப்பிடித்த நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் துருப்பிடித்த நிலையில் இருப்பதால் துப்பாக்கி தொடர்பான தகவல்கள் மற்றும் துப்பாக்கியின் இலக்கம் போன்றவை தெரியவில்லை என பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

மேலதிக சோதனைகளை பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்