கணவனை தீர்த்துக் கட்டிய பள்ளி ஆசிரியை
இந்தியா – சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 32). இவரது மனைவி நிவேதிதா (வயது 27). இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறார். பெங்களூருவில் வேலை பார்த்து வந்த சுந்தர்ராஜ் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பி விசைத்தறி தொழில் செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வாரம் அதிகாலை 4 மணிக்கு சந்தர்ராஜ் அவரது வீட்டில் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக, அவரது மனைவி நிவேதிதா, உறவினர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தற்கொலை வழக்கு பதிவு செய்த ஜலகண்டாபுரம் காவல் நிலைய பொலிஸார், உடலை மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்கில் தொங்கியது போல் கழுத்து இருகாமல் மூச்சுத் திணறி இறந்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு அவரது மனைவி நிவேதிதா மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்ததை ஒத்துக் கொண்டார் .
கணவர் சுந்தர்ராஜ் ஊரில் தொழில் செய்து வந்தபோது தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய வேளை பள்ளி தோழி வித்யாவின் மூலம் தினேஷ் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து தினேஷ் மற்றும் நிவேதிதா இடையே, பழக்கம் ஏற்பட்டு நட்பாகி, காலப்போக்கில் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த சுந்தர்ராஜ் நிவேதிதாவை கண்டித்ததோடு அவரது கைத்தொலைபேசியை பறித்து வைத்ததுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக, நிவேதிதா பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகின்றது.
மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவரும் உறவினர்களை சந்திப்பதற்காக பெங்களூர் சென்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட நிவேதிதாஇ தனது தோழி வித்யா மற்றும் கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரின் உதவியுடன் சுந்தர்ராஜிற்கு தூக்க மாத்திரைகளை கொடுத்துள்ளார். பின்னார் அவரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளனர். மூன்று பேரும் சேர்ந்து அவரது உடலை தூக்கில் தொங்க விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நிவேதிதா, தினேஷ் மற்றும் வித்யா ஆகிய மூன்று பேரையும் பொலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
