
மொக்கா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கம் தேயிலை நன்கொடை
மியான்மாரில் மொக்கா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இலங்கை அரசாங்கம் ஒரு மெற்றிக் டன் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.
அதன்படி இன்றைய தினம் வெளிவிவகார அமைச்சில் வைத்து, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடமிருந்து, கொழும்பில் உள்ள மியன்மார் தூதுவர் ஹான்து இதனைப் பெற்றுக்கொண்டார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருதரப்பு உறவுகளை, மியன்மார் தூதுவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
