
அரசின் புதிய வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தல் நிகழ்வு
அரசின் புதிய வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது மற்றும் அரச வருமானம் மற்றும் பொருளாதார ஈட்டல் முன்னேற்ற உறுதிப்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மத்திய வங்கியின் உதவிப்பணிப்பாளர் பரணவிதான, வடக்கின் ஆளுநர் திருமதி சார்ளஸ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீ பற்குணராஜா, யாழ். மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலந்தரம், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின் உயரதிகாரிகள் பிராந்திய ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் புதிய வரிக்கொள்கையின் அவசியம் தொடர்பில் துறைசார் அதிகாரிகாளால் விளக்கமளிக்கப்பட்டதுடன், இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சமரசிங்க சூம் தொழில் நுட்பத்தினூடாக வருகைதந்து தமது கருத்துக்களை முன்வைத்து விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

