மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வியாழேந்திரன் விடுத்த எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது சுற்றாடல்துறை அமைச்சினூடாக கடந்த இரண்டொரு வாரத்துக்குள் பாரியளவு மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளது என்றும் இதனால், சுற்றாடலுக்கும் பொதுமக்களுக்கும் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், சுட்டிக்காட்டியதுடன் இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தார்.

அத்துடன், இனிவரும் காலத்தில் அப்பகுதியிலிருந்து ஒரு அங்குலம் மணலையேனும் எடுக்க தான் இடமளிக்கப் போவதில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் கடுமையாக எச்சரித்தார்.