மட்டக்களப்பில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் 9 கிலோ 540 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கறைப்பற்று பகுதியை சேர்ந்த 33 மற்றும் 42 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்