மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.

இதன்படி, பிராண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன் டபிள்யூ. டி. ஐ. ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் அதிகரிப்பை பதிவு செய்து 78.84 அமெரிக்க டொலராக ஆக பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் மசகு எண்ணெய்யின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.