பாலத்திற்கு கீழே இருந்து 3 பசு மாடுகளின் தலைகள் மற்றும் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

-பதுளை நிருபர்-

நமுனுகுல பல்லகெடுவ வீதியில் இந்துகலை தோட்டத்திற்கு திரும்பும் வழியின் அருகாமையில் பாலத்துக்கு கீழே இருந்து 3 பசு மாடுகளின் தலைகள் மற்றும் உடல் பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதுளைவத்தை பிங்கராவ தோட்டம் நமுனுகுல பகுதியை சேர்ந்த கிருஸ்ணன் விக்னேஸ்வரன் என்பவரின் 3 பசு மாடுகள் கடந்த சனிக்கிழமை இரவு முதல் காணமல் போயுள்ளதாக குறித்த நபரினால் தேடப்பட்டு வந்த நிலையில் பல்லகெடுவ நமுனுகுல வீதியில் இந்துகலை தோட்டத்திற்கு செல்லும் வழிக்கு அருகாமையில் பாலத்திற்கு கீழ் இருந்து குறித்த நபரின் 3 பசுக்களின் தலைகளும் உறுப்புகளும் கிடப்பதை கண்டுபிடித்துள்ளார்

காணாமல் போன 3 பசுக்களின் தலைகள் பாலத்திற்கு கீழ் கிடப்பதாக குறித்த நபரினால் பல்லகெடுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட பல்லகெடுவ பொலிஸார் நமுனுகுல கனவரல்ல பகுதியில் மாடு வெட்டும் இடம் ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த 3 பசுக்களையும் மேற்குறிப்பிட்ட பகுதியில் வெட்டி உடலை இறைச்சிக்காக எடுத்துக் கொண்டு தலைப்பகுதிகளையும் தோல்களையும் பாலத்திற்கு அடியில் வீசி சென்று இருக்கலாம் என பல்லகெடுவ பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத போதிலும் விசாரணைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.