
பெருமளவிலான கஞ்சாவுடன் ஒருவர் கைது
-யாழ் நிருபர்-
யாழ் மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமுனை கடற்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து கஞ்சாவை எடுத்து செல்ல பயன்படுத்திய படகு மற்றும் 162 கிலோ எடையுள்ள கஞ்சா பொதிகள் என்பன மீட்கப்பட்டன.
இந்த கைது நடவடிக்கை கடற்படையால் முன்னெடுக்கப்பட்டது.
இது குறித்து மேலதிக விசாரணைகள் கடற்படையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

