
கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு : 4 தாய்லாந்து யுவதிகள் உட்பட ஆறுவர் கைது
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் “ஸ்பா” என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு தாய்லாந்து பெண்கள் உட்பட ஆறு சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது.
கைது செய்யப்பட்ட விபச்சார விடுதியின் முகாமையாளர் கொழும்பில் வசிப்பவர் என்றும் பயாகலையைச் சேர்ந்த மற்றுமொரு ஆண் உட்பட 37 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு தாய்லாந்து பெண்கள் சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
