உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த மூன்று வயது சிறுமி

நுவரெலியா மாவட்டத்தின் கொட்டகலை பிரதேசத்தில் வசிக்கும் செந்தில்குமார் ரேவதி தம்பதிகளின் புதல்வியான பவிஷ்ணா தனது மூன்று வயதில் உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்து பெருமை சேர்த்துள்ளார்.

உலக சாதனை புத்தக நிறுவனமானது இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இதற்காக விண்ணப்பித்து ஏப்ரல் மாதம் சாதனை படைத்த சிறுமையாக அறிவித்து இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இச்சிறுமி எதிர்காலத்தில் கல்வித் துறையிலும், ஏனைய துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகளைப் பெற்று எதிர்காலத்தில் நாட்டிற்கு பெருமையை தேடித் தரக் கூடிய ஒருவராக மிளிர வேண்டும் என்று பலரும் வாழ்த்துகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்