இணையத்தில் வைரலாகும் “பாகுபலி தாலி”
உணவு மீதான மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் உணவுகளை பற்றிய ஏராளமான வீடியோக்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் பல வீடியோக்கள் எளிதில் ட்ரெண்ட் ஆகிவிடும். ஆனால், சில வீடியோக்கள் எதிர்வினையாற்றக் கூடும். அதாவது, மக்களிடம் அவப்பெயரை பெற்று கொள்ளும். அப்படியொரு நிகழ்வு தான், சென்னையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு ஏற்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பெரும்பாலான உணவகங்கள் உணவு போட்டிகளை நடத்த தொடங்கியுள்ளனர். உதாரனமாக 30 நிமிடத்தில் 50 இட்லி சாப்பிட வேண்டும், 5 கிலோ பிரியாணியை ஒரு நபர் மட்டுமே சாப்பிட வேண்டும் இது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
நடத்தப்படும் உணவு போட்டிகள் மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதால், பலரும் இந்த வகையான போட்டிகளில் கலந்து கொள்வதை விரும்புகின்றனர். இது போன்ற, ஒரு உணவு போட்டியை தான் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்தினர்.
‘பாகுபலி’ தாலி என்பது பல வகையான உணவு வகைககள் ஒரு பெரிய தட்டில் வைத்து பரிமாறப்படும் ஒரு உணவு போட்டி ஆகும். இது பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதால் இந்த மீல்ஸ் வகைக்கு ‘பாகுபாலி தாலி’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த உணவகத்தின் பாகுபாலி தாலி சமீபத்தில் இணையம் முழுக்க வைரலாக தொடங்கியது.
இந்த தாலியில் சூப் மற்றும் ஸ்டார்டர்கள் முதல் மெயின் கோர்ஸ் வரை அனைத்தையும் சேர்த்து வழங்குகின்றனர். இதில் இனிப்பு வகைகளும் அடங்கும். இதில் பரிமாறப்படும் ஒரு கிண்ணத்தின் அளவு 60 முதல் 400 கிராம் வரை இருக்கும். இதில் சுறா புட்டு, வஞ்சரம் மீன் வருவல், மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, மட்டன் நல்லி, மட்டன் சுக்கா, இறால் மசாலா போன்ற ருசிகரமான பல உணவுகளை வழங்குகின்றனர்.
இந்த வீடியோஇ பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றினாலும்இ இதை சாப்பிடும் பலர் உணவை வீணாக்குகின்றனர். எனவேஇ இணையவாசிகள் பலர் இது போன்று உணவை வீணாக்குவது சரியில்லை என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும்இ இதுபோன்ற பெரிய தாலிகளை வாங்கக்கூடாது என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து விமர்சித்த பலர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். “இந்த பாகுபலி தாலியினால் என்ன பயன்? மக்கள் இந்த பெரிய தட்டில் இருக்கும் பாதி உணவுகளை அப்படியே விட்டுவிடுவார்கள்இ ”என்று ஒரு ட்விட்டர் பயனர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர்இ “பாகுபலி தாலிஇ 6 கிலோ சமோசாஇ 12 அடி தோசை போன்றவற்றின் மீதான இது போன்ற உணவு மோகத்தை ஒருபோதும் புரிந்து கொள்ள முடியவில்லை. எப்படியும் ஒருவர் இதை வாயில் பொருந்தும் வகையில் சிறிய துண்டுகளாக உடைத்து தான் சாப்பிட வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
மற்றொருவர்”இது போன்ற மிகப்பெரிய தோசைஇ மிகப்பெரிய தாலி ஆகிய உணவு போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ளது. இப்படி சாப்பாட்டை வீணாக்குவதற்கு பதில் பசியில் வாடும் மக்களுக்கு அவற்றை கொடுங்கள்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்