
தண்டவாளத்தில் தலை வைத்து தன் உயிரை மாய்க்க முயற்சித்த நபர் கைது
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5.55 மணிக்கு புறப்பட இருந்த புகையிரதத்திற்கு முன்னால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் ரயில்வே பொலிஸாரினால் பிடித்து பதுளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படடுள்ளார்.
பதுளை கனுபெலல பகுதியை சேர்ந்த 40 வயதுடைய புத்தல இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்கொலை முயற்சியில் ஈடுபடும் போது மது போதையில் இருந்ததாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
