
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வீதி போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதுடன் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
திருவிழாவை முன்னிட்டு ஒகஸ்ட் மாதம் 20ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி வரை நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்தை தடை செய்ய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வீதி மூடப்பட்டிருக்கும் குறித்த காலப்பகுதியில், பருத்தித்துறை வீதி வழியாக பயணிக்கும் வாகனங்கள் யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ்ப்பாண நகரை அடைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
