விசேட கல்வி பிரிவு மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவை

-கிண்ணியா நிருபர்-

பிரதேச செயலகப் பிரிவில் இயங்கி வரும் திஃசாரதா வித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவில் கல்வி கற்கும் மாணவர்களின் நலன் கருதி பாடசாலைக்கு சென்று வருவதற்கான இலவச போக்குவரத்து சேவை வழங்குவது பற்றிய கலந்துரையாடலானது பாடசாலை மண்டபத்தில் புதன்கிழமை இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் லண்டன் நாட்டில் உள்ள ஐகேஐஎஃப்ஓஎச் (IKIFOH) நிறுவனத்தினர் இதற்கான நிதியினை வழங்கவுள்ளனர். குறித்த பாடசாலையில் விசேட கல்வி பிரிவில் கற்கும் மாணவர்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் முச்சக்கரவண்டி மூலமான இலவச சேவை இடம் பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடலின் போது பாடசாலை அதிபர், சமூக சேவை உத்தியோகத்தர் ப.சுதன், விசேட கல்வி அலகு ஆசிரிய ஆலோசகர் உட்பட  ஐஎஃப்ஓஎச் (IFOH) அமைப்பின் பிரதிநிதிகள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்