
மதுபான சாலைக்கு நீதிமன்றம் நிரந்தர தடை
கிளிநொச்சி முழங்காவிலில் அமைக்கப்பட்ட மதுபான சாலைக்கு நிரந்தர தடை விதித்து இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
முழங்காவிலில் வழிபாட்டுத்தலத்திற்கு அண்மித்து அமைக்கப்பட்ட சட்டவிரோத மதுபான சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பொலிஸார் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நீதிமன்றத்தினால் மதுபான சாலையை நடத்துவதற்கு இரண்டு வார காலம் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த வழக்கு இன்றைய தினம் மாவட்ட நீதிமன்ற நீதவான் ஜெகநாதன் சுபராஜினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
