
மகாவலி ஆற்றில் பாய்ந்த கைதி
கண்டிபல்லேகலையில் உள்ள திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதி நேற்று வியாழக்கிழமை மகாவலி ஆற்றில் பாய்ந்துள்ள நிலையில் காணாமல் போயுள்ளார்.
பொரளை சீவலி லேனைச் சேர்ந்த மொஹமட் ரம்சீன் என்பவரே காணாமல் போயுள்ளார்.
திறந்தவெளிச் சிறைச்சாலையின் பயிர்ச்செய்கைப் பிரிவில் வேலை செய்துக்கொண்டிருந்தவாறு நேற்று தப்பிச் சென்ற போது, சிறைக்காவலர்கள் அவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.இதன்போது குறித்த நபர் மகாவலி ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு ஆற்றில் பாய்ந்த கைதி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
