
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவர் நியமிப்பு
ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக, இன்று வியாழக்கிழமை கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை கூட்டத்தில் அதன் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ரியாஸ் மியுலர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா டெலிகொம் சட்டத்துக்கு அமைவாக, பணிப்பாளர் சபையில் அவசர தீர்மானம் நிறைவேற்றப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் தலைவராக பதவி வகித்துவந்த, ரொஹான் பெர்னாண்டோவை நீக்க பணிப்பாளர் சபை எடுத்த தீர்மானத்தையடுத்து புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
