யாழ். சாவகச்சேரியில் இடம்பெற்ற விபத்தில் இரு முதியவர்கள் படுகாயம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, மீசாலை, ஐயா கடை சந்தி பகுதியில் இன்று காலை  5 மணியளவில் விபத்தில் சிக்கிய முதியவர்கள் இருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கிளினிக்கிற்கு சென்ற மூதாட்டியும், கூலி வேலைக்கு சென்ற மற்றொரு முதியவரும் வீதியோரமாக பயணித்துக் கொண்டிருந்த போது, பொலன்னறுவையை சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த கார் அவர்களை மோதித்தள்ளி, மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த குடும்பத்தினர் தமது மகளை யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அழைத்து வந்த போது கார் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்