இளைஞரை தாக்கி முகத்தில் சிறுநீர் கழித்த கும்பல்

இந்தியா – ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்தவர்கள் நவீன், ராமானுஞ்சேயலு. இவர்கள் இருவரும் கூட்டு சேர்ந்து அந்த பகுதியில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். இருவருக்கும் இடையிலான விரோதம் நாளுக்குநாள் வளர்ந்து வந்தநிலையில், தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நவீன் மீது ராமானுஞ்சேயலு கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன் நவீனை, ராமானுஞ்சேயலு மற்றும் அவருடைய கூட்டாளிகள் உள்ளிட்டோர் விரோதத்தை மறந்து நண்பர்களாக இருக்கலாம் எனக் கூறி மது அருந்த அழைத்துள்ளனர். இதனை நம்பி சென்ற நவீனை ஓங்கோலில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறத்தில் இருக்கும் காலி இடத்திற்கு அழைத்து சென்றனர். மூச்சு முட்ட குடித்து போதையில் தள்ளாடிய நவீனை ராமானுஞ்சேயலு மற்றும் அவரது கூட்டாளிகள் கடுமையாகத் தாக்கினர்.

அதன்பின்னும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல் ரத்த காயங்களுடன் விழுந்து கிடந்த நவீன் முகத்தின் மீது சுற்றி நின்று சிறுநீர் கழித்தனர். இந்த சம்பவத்தை அவர்களுடைய கூட்டாளிகளில் ஒருவர் வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

படுகாயம் அடைந்த நவீன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் நடைபெற்ற சம்பவம் குறித்து ஓங்கோல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முறைப்பாட்டை பதிவு செய்த போலீசார் அதன் பின் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஆந்திரா முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்