வைத்தியசாலை விடுதியில் இருந்து போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள விடுதியில் போதை ஊசி ஏற்றிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு பழக்கமான குறித்த இளைஞன் நேற்று இரவு விடுதிக்கு வந்துள்ளார்.

எனினும் பின்னர் அவரை காணாத நிலையில்இ அவரை தேடிச் சென்றபோது விடுதியின் ஒரு பக்கத்தில் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவரின் அருகில் ஊசி மூலம் போதை ஏற்றியதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்