சகோதரியின் ஆடையை அணிந்த மாணவியை கண்டித்த பெற்றோர் : மாணவி தீமூட்டி உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 8A சித்தி பெற்ற யாழ். மாணவி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பாசையூரை சேர்ந்த லிசியஸ் மேரி சானுயா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் சகோதரியின் ஆடையொன்றை உயிரிழந்த மாணவி அணிந்துள்ளார். இதை குடும்பத்தினர் கண்டித்ததால் கோபமடைந்த மாணவி, கடந்த 12ஆம் திகதி தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார்.

படுகாயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த16ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான இவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 8A,B சித்தி பெற்றவர்.  இவர் உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்