அரிசி இறக்குமதி செய்யவதற்கான தேவை இல்லை
கொழும்பு புறக்கோட்டையில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும், அரசியை இறக்குமதி செய்ய விவசாய அமைச்சு முயற்சிப்பதாகவும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என தேசிய கமநல சேவை ஒன்றியத்தின் தலைவர் அநுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒக்டோபர் மாதம் வரையில் அவசியமான அரசி கையிருப்பில் உள்ளது. இந்த நிலையில், எதற்காக அரிசியை இறக்குமதி செய்ய முயற்சிக்கப்படுகிறது என தேசிய கமநல சேவை ஒன்றியத்தின் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்