ரஷ்யாவிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள்

ரஷ்யாவிலிருந்து 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் கடந்த 10 மாதங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி விமானங்கள் ஊடாக வருகைதந்துள்ளனர்.

மொஸ்கோவிலிருந்து ஏரோஃப்ளோட் விமான சேவையின் எஸ்.யு 288 இலக்க விமானம் மூலம் 290 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை நாட்டை வந்தடைந்தனர்.

இதன்படி, கடந்த 10 மாதங்களில் இலங்கைக்கு வருகைதந்த ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 100,298 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்