
அதிவேக நெடுஞ்சாலையில் மதுபோதையில் சென்றவர் கைது
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களுத்துறை மத்துகம வீதி ஊடாக அனுமதியின்றி நுழைந்து மோட்டார் சைக்கிளை பயணித்த ஒருவர் தொடம்கொட நெடுஞ்சாலை நுழைவாயிலில் மாத்தறை நோக்கி பிரவேசித்து, வெலிபன்ன நோக்கி செல்ல முற்பட்ட போது நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் தொடங்கொடை நுழைவாயிலில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் மத்துகம பிரதேசததைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்படும் போது அதிகளவில் மது அருந்தியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தொடங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
