பதுளை பண்டாரவளை பகுதியில் சற்றுமுன் விபத்து : பலர் படுகாயம்!
-பதுளை நிருபர்-
பதுளை பண்டாரவளை பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து பதுளை பண்டாரவளை பகுதியில் தெமோதர வீதியில் உள்ள அணைக்கட்டிற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானது.
இதில் பலர் படுகாயமடைந்துள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் தெமோதர மற்றுமு; பதுளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்