
இறம்பொடை தோட்ட பின்னனியில் மலையக அமைச்சரா ?
நுவரெலியா மாவட்டத்தின் இறம்பொடை ஆர்பி டிவிசன் தோட்டமொன்றில் உள்ள பல குடும்பங்களை அவர்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளார்கள். அத்தோடு குறித்த தோட்டத்திற்கு விசேட அதிரடிப்படையும் களம் இறக்கப்பட்டது.
அரசியல் பலம் என்பது தமக்கு வாக்களித்த மக்களை போட்டு மிதிப்பதல்ல. மக்களுக்கு சேவை செய்வதற்கு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்துடன் மலையகத்திலிருக்கின்ற அரசியல் பிரதிநிதிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என்று கண்டி மாட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்டத்தில் இன்று புதிய பிரச்சினையை உருவாக்கியிருக்கின்றார்கள். காலம் காலமாக தாம் வசித்து வந்த லயன் குடியிருப்புகளில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றுவது. இதனை தோட்ட முகாமைத்துவங்கள் இன்று எல்லா பிரதேசங்களிலும் முன்னெடுத்து வருகின்றது.
தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள் இருந்தால் குடியிருபுக்களிலிருந்து வெளியயேற வேண்டும். அதற்காக பல அடாவடிதனங்களை முன்னெடுப்பதையும் இன்று நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.
இன்று இறம்பொடையிலும் இதே நிலையினை உருவாக்கியிருக்கின்றார்கள். உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.
பல வருடகாலமாக இங்கே வசித்து வந்தவர்கள் எங்கே போவார்கள் என்று சற்றும் சிந்திக்காமல் செயல்பட்டுள்ளார்கள்.
அத்தோடு விசேட அதிரடிப்படையும் அனுப்ப பட்டுள்ளது. இதனை ஆளும் தரப்பிலுள்ள மலையக அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளே செய்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
இதனூடாக தோட்ட மக்களை அச்சுறுத்தி அவர்களை குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றுவதற்கான புதிய வழிமுறைறை மற்றவர்களுக்கு எடுத்துகாட்டியுள்ளனர். இனி ஏனைய தோட்ட நிர்வாகமும் இதனை முன்னெடுக்கப்போகின்றது.
எமது மக்களிடம் வாக்குகளை பெற்று அரசியல் பலத்தை பெற்றனர். அந்த அரசியல் பலத்தை பயன்படுத்தி தனது குடும்பத்தினரின் நலனுக்காக சகாக்களின் நலனுக்காக அம்மக்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற வகையில் செயற்படுவது நியாயமானதா..? என்று கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
