கிழக்கு மாகாண ஆளுநரால் மட்டக்களப்பில் வீதி திறந்து வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்-

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் புனரமைக்கப்பட்ட கொக்குவில்- சத்துருகொண்டான்- தன்னாமுனை வீதி இன்று புதன்கிழமை   காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.வாசுதேவன்  மற்றும் அரச அதிகாரிகள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்படப் பலர் கலந்து கொண்டார் .

அதனைத் தொடர்ந்து சின்ன ஊறணி மாவடிப்பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜையிலும் ஆளுநர் கலந்து கொண்டதோடு, அங்கு வருகை தந்த மக்களோடு கலந்துரையாடி அவர்களின் அன்றாட பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது பொது மக்களால் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களையும் ஆளுநர் பெற்றுக்கொண்டார் .