
பயணி கேட்ட உணவு கிடைக்கவில்லை : தரையிறக்கப்பட்ட விமானம்!
வணிக வகுப்பு பயணி ஒருவருக்கு தேவையான உணவு கிடைக்காததால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சிகாகோவிற்கு திருப்பி விடப்பட்ட சம்பவம் ஒன்று குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விமானம் அமெரிக்காவின் ஹூஸ்டனில் இருந்து ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் வணிக வகுப்பு பயணி ஒருவர் கேட்ட உணவு வழங்கப் படாததால் பயணி விமானத்தில் குழப்பம் விளைவித்ததையடுத்து விமானம் திருப்பப்பட்டது.
இதேவேளை, கடந்த 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகள் கட்டுக்கடங்காமல் நடக்கும் சம்பவங்கள் 47% அதிகரித்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
