
பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது!
-பதுளை நிருபர்-
மஹியங்கனை பிரதேசத்தில் பிரதான போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகத்திற்கிடமான இடத்தினை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 கிராம் 710 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அத்தோடு கண்டி கன்னோருவ பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்
இந்த சந்தேக நபர் மஹியங்கனை பிரதேசத்திற்கு லொக்கேஷனல் முறையில் போதைப்பொருள் விநியோகம் செய்து வருவதாகவும், இதற்காக இலங்கை வங்கிக்கு சொந்தமான கணக்கை பயன்படுத்தி, அந்த கணக்கில் பணம் செலுத்தி, உத்தரவு வரும் வரை குறிப்பிட்ட இடங்களில் ஹெரோயின் விற்பனை செய்வதாகவும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர் கண்டிஇ பேராதனை, கன்னோருவை, கெலிஓயா, ஹெட்டிபொல, வில்கமுவ ஆகிய பகுதிகளில் ஹெரோயின் விற்பனை செய்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது, அவரிடம் இருந்த போதைப்பொருளுக்கு மேலதிகமாக, சிறிய டிஜிட்டல் தராசு, இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சந்தேக நபரை விசாரணைகளின் பின்னர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

