காட்டு யானையை சுட்டு கொன்றவர் கைது!

 

அம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அளுத்வெவ கிளிபுன்ன பகுதியில் வயல்வெளியில் காட்டு யானையை வெடி வைத்து கொன்று குறித்த காட்டு யானையை வயல் வெளியில் புதைத்த குற்றச்சாட்டில்  வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளினால் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபரை வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.