
மாடு மேய்க்க சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!
-திருகோணமலை நிருபர்-
அனுராதபுரம் மாவட்டம் கஹடகஸ்திகிலிய-திவுல்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கஹடகஸ்திகிலிய-மஹபொத்தான- பபரஹெல பகுதியைச் சேர்ந்த சிறிவர்தனகே ஜாதக ஸ்ரீவர்த்தன (33வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக அப்பகுதியிலுள்ள குளத்திற்கு சென்றபோது யானை தாக்கியதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்துள்ளதாகவும் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கஹடகஸ்திகிலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் திவுல்வெவ பொலிஸார் தெரிவித்தனர்.
