கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணைகுழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் கடமையேற்பு!

-மட்டக்களப்பு நிருபர்-

கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நே.விமல்ராஜ் மீண்டும் நேற்று திங்கட்கிழமை அலுவலக ஆவணத்தில் கையொப்பமிட்டு, உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் அவர் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நீதிமன்றக் கட்டளையின் பிரகாரம் மீண்டும் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப் பேற்றுக் கொண்ட பணிப்பாளர் தமது கடமையை உரியவாறு செய்யப் போவதாக ஊடகங்களுக்கு இதன்போது கருத்துத் தெரிவித்தார்.