இன்று தங்கத்தின் விலை நிலவரம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நாட்டில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று திங்கட்கிழமை 22 கரட் தங்கத்தின் விலை 151,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 22 கரட் தங்கத்தின் விலை 147,000 ரூபாவாக காணப்பட்டது.

அத்துடன், 24 கரட் தங்கத்தின் விலை 164,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கடந்த வாரம் 24 கரட் தங்கத்தின் விலை 160,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.