
முனைக்காடு இராமகிருஸ்ணா அணி சம்பியனானது!
-மட்டக்களப்பு நிருபர்-
முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகத்தின் 54 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பித்தும், உயிர்நீத்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நடத்தப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
கடந்த 7,8,9 ஆம் திகதிகளில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 36அணியினர் பங்கேற்றிருந்தனர்.
இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா அணியினரும், மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியினரும் தெரிவாகினர்.
இதில் 1:0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் வெற்றிவாகை சூடியது, மகிழை இளைஞர் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது.
இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களையும், பரிசில்களையும் வழங்கி வைத்தார்.


