ஐஸ் போதைப்பொருளுடன் கைது!
பொலிஸ் விசேட அதிரடி படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை – வெலிகம, போகன்விலா பிரதேசத்தில் இடம் பெற்ற சுற்றிவளைப்பில் மடகஸ்காரில் கைதான பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டா என அழைக்கப்படும் நதுன் சிந்தகவின் போதைப்பொருள் வலையமைப்பை செயற்படுத்தும் பட்டவல சுபுன் என்பவரே கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து ஐஸ் வகை போதைப்பொருள் மற்றும் ஒரு தொகை பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளைஇ மேல் மற்றும் தென் மாகாணங்களில் குற்ற நடவடிக்கைகளை ஒழிப்பதற்காகஇ பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்