ஓ.எம்.பி அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்!

-யாழ் நிருபர்-

காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தால் (OMP) மேற்கொள்ளப்படும் பதிவுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட ஓ.எம்.பி அலுவலகத்தினால் அழைக்கப்பட்டவர்களிற்கான பதிவுகள் இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவல ஆணையாளர் T. ஜோகராஜா, கிளிநொச்சி பிராந்திய இணைப்பாளர் நிசாந்தன் ஜீட் பீரிஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினர்.

இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது ஆதங்கத்தினை வெளியிட்டனர்.

போராடுவதற்கான உரிமை உள்ளதாகவும் பதிவுக்காக வருகை தருபவர்களிற்கு இடையூறு இல்லாமல் செயற்படுமாறும் ஆணையாளர் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்