கத்தி குத்து தாக்குதல்: ஒருவர் படுகாயம்
-நுவரெலியா நிருபர்-
நுவரெலியா பிரதான நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த பேருந்து நடத்துனர் ஆறுமுகம் ஹாரியதாஸ் (வயது – 33) என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளதுடன் கத்தியால் குத்திய பழ வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்