கழிவுத் தேயிலை: ஒருவர் கைது

ஜா எல – பமுனுகம – வெலிகம்பிடிய பகுதியில் 59,875 கிலோகிராம் எடை கொண்ட கழிவுத் தேயிலையுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தெமட்டகொட பகுதியை சேர்ந்த 47 வயதுடைய சந்தேகநபர் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மேலதிக விசாரணைகளுக்காக பமுனுகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.